மு.க.ஸ்டாலினுடன் கே.எஸ்.அழகிரி சந்திப்பு!

  Newstm Desk   | Last Modified : 06 Feb, 2019 03:19 pm
ks-alagiri-meets-mk-stalin

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்ததாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கு அவர் எனக்கு வாழ்த்துக்களை தெரிவித்ததாக கூறினார். 

இன்று திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கே.எஸ்.அழகிரி, "நான் மரியாதை நிமித்தமாகவே மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினேன். தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து இருவரும் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டோம்.

மேலும், தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியான பிறகு தொகுதி பங்கீடு குறித்து விவாதித்து அறிவிக்கப்படும். தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து நிறை, குறைகள் என்ற பேச்சுக்கே இடம் இருக்காது. தமிழகத்தில் பிரச்சாரம் செய்ய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் வரவிருக்கின்றனர். 

தமிழகத்தை பொறுத்தவரை டிடிவி தினகரன் எதிர்கொள்ளவேண்டிய ஒரு சக்தி என்று எனக்கு தெரியவில்லை. எங்களுக்கு போட்டி அதிமுக தான். பாஜக தலைமையிலான மத்திய அரசை தூக்கி எறிய வேண்டும் என்பதுதான் எங்களது கூட்டணியின் கொள்கை. எங்களது கூட்டணிக்கு சிலர் வரவிருக்கிறார்கள். அது குறித்து கட்சி தலைமை முடிவெடுக்கும்" என்றார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close