இரு அரசியல் தலைவர்கள் சந்தித்தால் என்ன பேசுவார்கள்? அரசியல் தான்! - திருநாவுக்கரசர்

  Newstm Desk   | Last Modified : 06 Feb, 2019 04:55 pm
thirunavukkarasar-press-meet-after-met-with-rajinikanth

இரண்டு அரசியல் தலைவர்கள் சந்தித்தால் என்ன பேசிக்கொள்வார்கள்.. அரசியல் தான்.. என  ரஜினிகாந்துடனான சந்திப்பிற்கு பின்னர் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். 

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசரை நேரில் சந்தித்து தனது மகள் திருமணத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த். அதே சமயத்தில் விசிக தலைவர் திருமாவளவனும் , திருநாவுக்கரசரை சந்திக்க சென்னை அண்ணா நகரில் உள்ள அவரது இல்லத்திற்கு வந்துள்ளார். இதனால் திருமாவளவன் மற்றும் திருநாவுக்கரசர் ஆகிய இருவரையும் ரஜினிகாந்த் சந்தித்து, தனது மகள் திருமணத்திற்கு அழைத்துள்ளார். 

இந்த சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், "சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் எனக்கு நெருங்கிய நண்பர். 40 ஆண்டுகள் பழக்கத்தினால் ரஜினிகாந்த் தனது மகள் திருமணத்திற்கு என்னையும், எனது குடும்பத்தையும் அழைத்தார். 

நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்திப்பதால், தமிழக அரசியல் நிலவரங்கள் உள்ளிட்ட பொதுவான விஷயங்களை பேசிக்கொண்டிருந்தோம். குறிப்பிட்டு சொல்வதற்கு ஒன்றுமில்லை. நான் அமெரிக்கா சென்றபோது, அங்கு ரஜினிகாந்த் சென்றிருந்தார்.

அவர் ஒரு மாநிலத்தில் இருந்திருப்பார், நான் ஒரு மாநிலத்தில் இருந்திருப்பேன். நாங்கள் அங்கு சந்தித்துக்கொள்ளவில்லை. சந்தித்தால், சந்தித்தேன் எனக்கூறப்போகிறேன். இதில் மறைப்பதற்கு எதுவும் இல்லை. எனது நண்பரை அமெரிக்காவில் சென்று தான் சந்திக்க வேண்டும் என்றில்லை. 

ரஜினிகாந்த் அரசியல் கட்சித் தொடங்கினாலும், தொடங்காவிட்டாலும் அவர் மக்களால் மதிக்கப்படும் ஒரு தலைவர் தான். ஜெயலலிதா காலத்தில் இருந்தே ரஜினிகாந்த் அரசியல் பேசிக்கொண்டு தான் இருக்கிறார். சினிமாவிலும் அரசியல் பேசிக்கொண்டிருக்கிறார். எனவே அவர் கட்சி தொடங்காமல் இருந்தாலும், அவரும் ஒரு அரசியல் தலைவர் தான்.

இரண்டு அரசியல் தலைவர்களும் சந்தித்தால் என்ன பேசுவார்கள்? அரசியல் பற்றி தான் பேசினோம். ஆனால் அதுபற்றி சொல்வதற்கு எதுவும் இல்லை. மற்றபடி, அவர் கட்சி ஆரம்பிப்பாரா? எப்போது ஆரம்பிப்பார் ? என்பதையெல்லாம் நீங்கள் அவரிடம் தான் கேட்க வேண்டும். ஆனால், அவர் கட்சி தொடங்கினால் என்னை அழைக்கமாட்டார். ஏனென்றால் நான் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் நம்பிக்கையை பெற்றவன். அவர் பிரதமர் ஆக வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். அதற்காக கட்சிப்பணி ஆற்றுவேன். நான் காங்கிரஸை விட்டு செல்ல மாட்டேன்" என்றார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close