உடைகிறது ரஜினி மக்கள் மன்றம்? 

  Newstm Desk   | Last Modified : 08 Feb, 2019 03:30 pm
split-in-rajini-makkal-mandram

தனிக் கட்சி துவங்கும் அறிவிப்பை வெளியிட்டு, ஓராண்டுக்கு மேல் ஆகியும், நடிகர் ரஜினிகாந்த், கட்சியின் பெயர், சின்னம் குறித்த எந்த அறிவிப்பையும் வெளியிடாதால், ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் விரக்தி அடைந்துள்ளனர். 

இதன் எதிரொலியாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகளில் ஒரு பிரிவினர், மன்றத்திலிருந்து விலகி, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் முன்னிலையில், அந்த கட்சியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த், 2017 டிச., 12ல், தன் அரசியல் நிலைப்பாட்டை ரசிகர்களுக்கு விளக்கினார். அப்போது பேசிய அவர், ரசிகர் மன்றங்களை, மக்கள் மன்றங்களாக மாற்றுவதாகவும், அந்த மன்றங்கள் மூலம், அரசியலில் ஈடுபடப்போவதாகவும் அறிவித்தார். 

தனிக் கட்சி துவங்கி, தமிழகத்தின், 234 சட்டசபை தொகுதிகளிலும், தனித்து போட்டியிடப்போவதாகவும் கூறினார். இதனால், பல ஆண்டுகளாக ரஜினியின் அரசியல் வருகைக்காக காத்திருந்த ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். 

இதை தொடர்ந்து, மாவட்ட வாரியாக, ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். அவர்களை சந்திக்கும் ரஜினி, அவ்வப்போது நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கி வருகிறார். 

இந்நிலையில், தனிக் கட்சி ஆரம்பிப்பது தொடர்பான அறிவிப்பு வெளியாகி ஓராண்டு மேல் ஆகியும், கட்சியின் பெயர், சின்னம் உள்ளிட்ட எந்த அறிவிப்பும் வெளியாகாததால், ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் விரக்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. 

இதன் எதிரொலியாக, கிருஷ்ணகிரி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் சிலர், தி.மு.க., தலைவர் ஸ்டாலினை சந்தித்து, அந்த கட்சியில் இணைய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

விரைவில் லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில், ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள், மாற்றுக் கட்சிகளில் இணைந்தால், அது, பிற மாவட்ட நிர்வாகிகளுக்கும் முன்னுதாரணமாக போய்விடும் என, ரஜினியின் ஆதரவாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

ஏற்கனவே, மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை துவங்கியுள்ள நடிகர் கமல், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள, 40 லோக்சபா தொகுதிகளிலும், தங்கள் கட்சி தனித்து போட்டியிடும் என அறிவித்துள்ளார். 

இந்த சூழ்நிலையிலாவது, ரஜினி, தன் அரசியல் கட்சி குறித்தும், வரும் தேர்தலில் போட்டியிவதா இல்லையா என்பது குறித்தும் விளக்க வேண்டும் என, அவரது ஆதரவாளர்கள் மற்றும் மன்ற நிர்வாகிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close