டெல்லி திரும்பினார்  பியூஷ் கோயல்!

  Newstm Desk   | Last Modified : 15 Feb, 2019 08:04 am
central-minister-goyal-returned-to-delhi-today-early-morning

மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக அதிமுகவுடனான முதல்கட்ட  பேச்சுவார்த்தையை முடித்துக் கொண்டு, மத்தியமைச்சர் பியூஷ் கோயல் இன்று அதிகாலை டெல்லி திரும்பினார்.

வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக- அதிமுக கூட்டணி உறுதிவிட்ட நிலையில், கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த மத்திய அமைச்சரும், பாஜகவின் தமிழக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் நேற்றிரவு சென்னை வந்தார்.

அவரும், அதிமுகவின் தரப்பில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோர் அடங்கிய  குழுவினரும், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தொழிலதிபர் பொள்ளாச்சி மகாலிங்கம் வீட்டில்  நேற்றிரவு பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்டவை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

பாஜக- அதிமுக கூட்டணி தொடர்பான முதல்கட்ட பேச்சுவார்த்தையை முடித்து கொண்டு, அமைச்சர் பியூஷ் கோயல் இன்று அதிகாலை டெல்லி திரும்பினார்.

"இருதரப்புக்கும் இடையேயான பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்ததாகவும், தொகுதி பங்கீடு குறித்து அதிமுகவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்படும்" என்றும் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்  தெரிவித்தார்.

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close