தேர்தல் கூட்டணி - பா.ம.க. நிறுவனர் ராமதாசுடன், அ.தி.மு.க. அமைச்சர்கள் பேச்சுவார்த்தை

  Newstm Desk   | Last Modified : 19 Feb, 2019 10:21 am
alliance-discussion-between-admk-ministers-and-pmk-patriarch

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வை இணைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. சென்னையில் பா.ம.க. நிறுவனர் ராமதாசை, அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் சந்தித்துப் பேசினர்.

முன்னதாக, அ.தி.மு.க. - பா.ஜ.க. இடையிலான தொகுதிப் பங்கீடு இன்று அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதையொட்டி, பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா இன்று சென்னை வருவதாக இருந்தது. இந்நிலையில், அவரது பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. முதலில் பா.ம.க.வுக்கான இடங்களை உறுதி செய்து விட்டு, அதன் பிறகு பா.ஜ.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்ற முடிவுக்கு அ.தி.மு.க. வந்திருக்கும் என்று கருதப்படுகிறது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க., தே.மு.தி.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. அதில், பா.ஜ.க. சார்பில் பொன்.ராதாகிருஷ்ணனும், பா.ம.க. சார்பில் அன்புமணி ராமதாசும் வெற்றி பெற்றனர். தனித்துப் போட்டியிட்ட அ.தி.மு.க. மீதமுள்ள அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. இந்நிலையில், அக்கட்சியில் தற்போது ஓரணியில் இணைவது தமிழக அரசியல் களத்தில் முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close