காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் - இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு

  Newstm Desk   | Last Modified : 20 Feb, 2019 08:56 am
congress-could-get-10-seats-in-dmk-alliance-official-announcement-today

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் வரை ஒதுக்கப்படலாம் எனத் தெரிகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகவுள்ளது.

தமிழகத்தில் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட நடவடிக்கைகள் நேற்று முதல் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளன. ஆளுங்கட்சியான அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு 7 தொகுதிகளும், பா.ஜ.க.வுக்கு 5 தொகுதிகளும் ஒதுக்குவதற்கான கூட்டணி உடன்பாடு நேற்று கையெழுத்தானது. அந்தக் கூட்டணியில் ஏ.சி.சண்முகம் தலைமையிலான புதிய நீதிக்கட்சி, பாரிவேந்தர் பச்சமுத்து தலைமையிலான இந்திய ஜனநாயகக் கட்சி ஆகியவையும் இணைவது உறுதியாகியுள்ளது. 

இந்நிலையில், தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை இடங்கள் ஒதுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன், தி.மு.க. எம்.பி.யான கனிமொழி நேற்று டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் இரு கட்சிகளுக்குமான தொகுதிப் பங்கீடு உடன்பாடு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 9 தொகுதிகளும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியும் சேர்த்து 10 தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் எனத் தெரிகிறது. எனினும் இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிறது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close