திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகளுக்கு எத்தனை தொகுதி?

  Newstm Desk   | Last Modified : 20 Feb, 2019 11:27 am
alliance-talks-between-dmk-and-vck

திமுக கூட்டணியில், தொல்.திருமாவளவன் தலைமையிலான விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு எத்தனை தொகுதிகளை ஒதுக்குவது என்பது குறித்து நாளை பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. சிதம்பரம், விழுப்புரம் ஆகிய 2 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என திருமாவளவன் கோரிக்கை வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீட்டை அறிவித்து கூட்டணியை பலப்படுத்துவதில் ஆளுங்கட்சியான அதிமுக வேகம் காட்டி வருகிறது. தமிழ் மாநில காங்கிரஸ், இந்திய ஜனநாயகக் கட்சி உள்ளிட்டவையும் அந்த அணியில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல், காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட திமுக தயாராகி வருகிறது. காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் 9 இடங்களும், புதுச்சேரியில் உள்ள ஓரிடமும் சேர்த்து 10 தொகுதிகளை ஒதுக்க திமுக முன்வந்துள்ளதாக தெரிகிறது. அதற்கான அறிவிப்பு மாலையில் வெளியாகவுள்ளது. இதேபோல், விடுதலை சிறுத்தைகள் கட்சி, திமுக கூட்டணியில் 2 தொகுதிகளை கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொகுதி உடன்பாட்டை இறுதி செய்வதற்காக இரு கட்சிகளும் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையை நடத்தி வருகின்றன.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close