தமிழ் மாநில காங்கிரஸையும் கூட்டணிக்குள் இழுத்த அதிமுக!

  Newstm Desk   | Last Modified : 20 Feb, 2019 06:16 pm
admk-ropes-in-tmc-into-alliance

வரும் நாடாளுமன்றத் தேர்தலில், அதிமுக, பாஜக மற்றும் பாமக கட்சிகள் கூட்டணி சேர்ந்துள்ள நிலையில், த.ம.கா, கூட்டணியில் இணைந்துள்ளதாகவும், அக்கட்சிக்கு மயிலாடுதுறை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அதிமுக மாபெரும் கூட்டணியை உருவாக்கி வருகிறது. மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா, மற்றும் தமிழகத்தின் பாட்டாளி மக்கள் கட்சி ஆகியவை அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்துள்ளனர். பாஜகவுக்கு 5 இடங்களும், பாமகவுக்கு 7 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன நிலையில், தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் இணைய உள்ளதாகவும், அதற்காக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் இன்று தகவல்கள் வெளியாகின. ஆனால், அதை கட்சித் தலைவர் ஜிகே வாசன் மறுத்திருந்தார்.

இந்த நிலையில், பேச்சுவார்த்தைகள் முடிவடைந்துவிட்டதாகவும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு மயிலாடுதுறை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close