காங்கிரஸுக்கு 10 தொகுதிகள்: மு.க ஸ்டாலின்

  Newstm Desk   | Last Modified : 20 Feb, 2019 08:49 pm
congress-will-get-10-seats-mk-stalin

வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக தமிழகத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடத்தி வந்த நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் மற்றும் திமுக கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வந்தன. இன்று கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்ற நிலையில், அண்ணா அறிவாலயத்தில் இறுதி கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தன. இதில் காங்கிரஸ் தரப்பில் முகுல் வாஸ்னிக், கே.சி.வேணுகோபால், கே.எஸ்.அழகிரி ஆகியோர் கலந்துகொண்டனர். 

பேச்சுவார்த்தை முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த மு.க ஸ்டாலின், காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கியுள்ளதாக தெரிவித்தார். மேலும், அதிமுக, பாஜக, பாமகவின் கூட்டணி மக்கள் நல கூட்டணி அல்ல, பண நல கூட்டணி என்று கூறினார். தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் திருப்தியடைந்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் கே.சி.வேணுகோபால் தெரிவித்தார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close