தொகுதிப் பங்கீடு: திமுக - மதிமுக பேச்சுவார்த்தை தொடங்கியது!

  Newstm Desk   | Last Modified : 22 Feb, 2019 11:26 am
dmk-mdmk-alliance-discussion-starts-on

நாடாளுமன்றத் தேர்தல் தொகுதிப் பங்கீடு குறித்து திமுக - மதிமுக இடையே பேச்சுவார்த்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் சற்றுமுன் தொடங்கியுள்ளது. 

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், தமிழகத்தில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. திமுகவை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி உறுதியாகியுள்ளது. புதுச்சேரி சேர்த்து மொத்தம் 10 தொகுதிகள் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

நேற்று மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சியுடன் திமுக நேற்று முதல்கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. தொடர்ந்து நேற்று மதிமுகவுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், திமுக - மதிமுக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை சற்றுமுன் தொடங்கியுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் வைத்து நடைபெறும் இந்த பேச்சுவார்த்தையில் மதிமுக சார்பில் முன்னாள் எம்.பி கணேஷ் மூர்த்தி தலைமையிலான 5 பேர் கொண்ட குழு கலந்துகொண்டுள்ளது. 

தொடர்ந்து இன்று மதியம் 12.30 மணிக்கு கூட்டணி பேச்சுவார்த்தைக்காக அண்ணா அறிவாலயத்திற்கு வருமாறு விசிகவுக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close