அதிமுக- பாஜக நிர்வாகிகளுடன் ஜி.கே.வாசன் சந்திப்பு?

  Newstm Desk   | Last Modified : 22 Feb, 2019 02:37 pm
gk-vasan-meet-admk-bjp-executives

மதுரையில் அதிமுக- பாஜக நிர்வாகிகளுடன் ஜி.கே வாசன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகம் வருகை தந்துள்ள அமித் ஷா மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ்-உடன்  ஜி.கே வாசன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

நாடாளுமன்றத் தேர்தலில், தமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுக, பாஜக மற்றும் பாமகவுடன் கூட்டணி வைத்துள்ளது. இதில், பாமகவுக்கு 7 தொகுதிகளும், பாஜகவுக்கு 5 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. நேற்று என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி தொகுதி ஒதுக்கீடு செய்து அதிமுகவுடனான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

தொடர்ந்து, தேமுதிக மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், முக்கிய கட்சியான தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இழுபறி நிலையில் இருக்கும் சூழலில், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், இன்று தமிழகம் வருகை தந்துள்ள அமித் ஷாவை சந்தித்து பேசினார். 

தொடர்ந்து, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், அதிமுக- பாஜக நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close