மூன்று நாட்களில் கூட்டணி அறிவிப்பு: ஜி.கே. வாசன்

  Newstm Desk   | Last Modified : 22 Feb, 2019 06:16 pm
alliance-announcement-in-3-days-gk-vasan

நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வரும் த.மா.கா கட்சியின் தலைவர் ஜிகே வாசன், ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், மூன்று நாட்களில் கூட்டணி அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே வாசன், இன்று மதுரை விமான நிலையத்தில், பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அமித் ஷா, மற்றும் தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்ட அதிமுகவினரை சந்தித்து திடீர் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியானது. இந்த தகவலை பின்னர் ஜிகே.வாசன் மறுத்தார்.

அதிமுக நிர்வாகிகளை சந்திக்கவில்லை என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும், ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடத்தி வருவதாகவும், இன்னும் மூன்று நாட்களில் கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close