திமுக - இந்திய முஸ்லிம் லீக் கூட்டணி!; ஒரு இடம் ஒதுக்கீடு

  Newstm Desk   | Last Modified : 22 Feb, 2019 09:01 pm
indian-muslim-league-joints-dmk-alliance-gets-one-seat

நாடாளுமன்றத் தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் இந்திய முஸ்லீம் லீக் கட்சி இணைந்துள்ளது. அக்கட்சிக்கு, கூட்டணியில் ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக, முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலில் திமுக காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி சேர்ந்துள்ள நிலையில், இந்திய முஸ்லிம் லீக் கட்சியும் தற்போது திமுக கூட்டணியில் இணைந்துள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் அதிமுக, பாஜக, பாமக ஒரு பக்கம் கூட்டணி சேர்ந்துள்ள நிலையில், திமுக காங்கிரஸ் கட்சியை செய்துள்ளது. இன்று திடீர் திருப்பமாக, தேமுதிக தலைவர் விஜயகாந்தை மு.க ஸ்டாலின் சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், தான் நலம் விசாரிக்க மட்டுமே சென்றதாகவும், அரசியல் காரணங்களுக்காக செல்லவில்லை என்றும் ஸ்டாலின் கூறினார். ஆனால், ஸ்டாலினே நேரடியாக சென்றதால், திமுக - தேமுதிக கூட்டணிக்கு வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. 

இந்த நிலையில், இந்திய முஸ்லிம் லீக் கட்சியுடன் திமுக கூட்டணி சேர்ந்துள்ளது. தலைவர் பேராசிரியர் காதர் மைதீன் தலைமையிலான முஸ்லிம் லீக் பிரதிநிதிகள் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு க ஸ்டாலினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தைக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த காதர் மைதீன், திமுகவுடன் கூட்டணி சேர்ந்துள்ளதாகவும், தங்களுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். கூட்டணியில் பல்வேறு கட்சிகள் இணைய உள்ளதால், தங்களுக்கு ஒரு தொகுதியை மட்டுமே ஒதுக்க முடியும், என்று திமுக தரப்பில் கூறியதாகவும், அதை தாங்கள் ஏற்றுக் கொண்டதாகவும் அவர் தெரிவித்தார். 

தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகள் பட்டியலை ஸ்டாலினிடம் கொடுத்துள்ளதாகவும், அது குறித்த முடிவு விரைவில் தெரியவரும் என்றும் அவர் கூறினார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close