ஆட்சியை காப்பாற்றவே கூட்டணி: அதிமுக எம்.பி அன்வர் ராஜா

  Newstm Desk   | Last Modified : 23 Feb, 2019 05:46 pm
alliance-is-to-hold-power-admk-mp-anwar-raja

ஆட்சியை காப்பாற்றுவதற்காகவே பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைத்துள்ளதாகவும், தேர்தல் காலத்தில் வைக்கப்படும் கூட்டணி, லாப நஷ்ட கணக்கு தான், என்றும் அதிமுகவை சேர்ந்த மக்களவை உறுப்பினர் அன்வர்ராஜா தெரிவித்துள்ளார்.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக மற்றும் பாரதிய ஜனதா கட்சிகள் கூட்டணி சேர்ந்து போட்டியிடவுள்ள நிலையில், அதிமுக கட்சியின் மக்களவை உறுப்பினர் அன்வர் ராஜா, இது ஆட்சியை தக்க வைப்பதற்கான முயற்சி தான் என்று தெரிவித்துள்ளார். 

பல்வேறு சமயங்களில் மத்திய அரசை விமர்சித்து பேசியுள்ள எம்.பி அன்வர் ராஜா, முத்தலாக் சட்டத்தை எதிர்த்து மத்திய அரசை கடுமையாக சாடியிருந்தார். பாஜக-வுடன் அதிமுக கூட்டணி சேர்ந்துள்ள நிலையில் அதுகுறித்து பேசிய அவர், "இது ஆட்சியை காப்பாற்றுவதற்கான கூட்டணி தான்" என்று வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார். தேர்தல் சமயத்தில் வைக்கப்படும் கூட்டணிகள், லாப நஷ்ட கணக்கு மட்டும் தான் என்றும் அவர் கூறினார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close