அதிமுகவிடம் தொண்டர்கள்; தினகரனிடம் குண்டர்கள்: ஓபிஎஸ் தாக்கு

  Newstm Desk   | Last Modified : 26 Feb, 2019 03:16 am
deputy-chief-minister-o-panneerselvam-fires-at-ttv-dinakaran

இன்னும் ஓரிரு நாட்களில் அதிமுக கூட்டணி பற்றிய இறுதி முடிவுகள் வெளியாகும் என்றும், "அதிமுக-விடம் தொண்டர்கள் உள்ளதனர். டிடிவி தினகரனிடம் குண்டர்கள் உள்ளனர்" என்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் விமர்சனம் செய்தார்.

சென்னையில் வியாசர்பாடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் விரைவில் முடிவடைந்து விடும் என்றும், இன்னும் ஓரிரு நாட்களில் இறுதி கூட்டணி பற்றிய அறிவிப்பு வெளியிடப்படும், என்றும் உறுதியளித்தார். தேமுதிக-வுடனான கூட்டணி பேச்சுவார்த்தைகளில் இழுபறி உள்ளதா என செய்தியாளர்கள் கேட்டதற்கு, "இழுபறி என்ற பேச்சுக்கே இடமில்லை. தேமுதிகவுடனான பேச்சுவார்த்தைகள் சுமூகமாக நடைபெறுகிறது" என்றும் அவர் தெரிவித்தார்.

கூட்டணி அதிமுக தலைமையில் தான் அமையும் என்றும், இறுதி கூட்டணி பேச்சுவார்த்தைகள் முடிவடைந்த பிறகு, அனைத்து தலைவர்களும் கலந்து கொள்ளும், மாநாடு நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், "அதிமுக பக்கம் தொண்டர்கள் உள்ளனர். டிடிவி தினகரன் பக்கம் குண்டர்கள் தான் உள்ளனர்" என்றும் ஓபிஎஸ் அமமுக தலைவர் டிடிவி தினகரனை தாக்கி பேசினார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close