அரசியலில் யாருக்கும் வெட்கம் இல்லை!

  பாரதி பித்தன்   | Last Modified : 26 Feb, 2019 06:02 pm
special-article-about-anbumani-ramdoss

ஒரே வரிசையில் வரும் வீரர்கள், குறிப்பிட்ட இடம் வந்ததும், இரண்டு வரிசையாக பிரிவது போல, லோக்சபா தேர்தல் குறித்த பேச்சு எழும் வரை, தனித்தனியாக இருந்த அனைத்து கட்சிகளும், அதிமுக, திமுக ஆகியவற்றின் பின்னால் சென்று நிற்க தொடங்கி உள்ளன. இதில் யாருக்கும் எந்த கூச்சமும் இல்லை. அப்படியே இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் போய் கொண்டே இருக்கிறார்கள். 

தேர்தலுக்கு தேர்தல் கூட்டணியை மாற்றிக் கொள்ளும் பாமகவில், அன்புமணிக்கு மட்டும் இந்த முறை மனம் உறுத்தி இருக்கும் போல, இதனால் கடந்த, 25ம் தேதி சென்னையில், பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார். அதில் 

வட்ட செயலாளர் வண்டுமுருகனுக்கு இணையாக, 20 நிமிடம் பாமக அதிமுக கூட்டணியை பற்றி எடுத்துக் கூறிய பின்னர்,  ஊடகத்தினர் கேள்விகளை எழுப்பினர். கேள்விகள் அனைத்துமே, பாமக, அதிமுக கூட்டணி தவறு என அன்புமணி ஒப்புக்கொள்ள வைக்க வேண்டும் என்ற வெளிப்படையான நிலைப்பாட்டுடன் மட்டுமே இருந்தன.  

ஒரு கட்டத்தில் ‛‛கடந்த, 8 ஆண்டுகளாக கொள்கையை சொல்லி தனித்து நின்று ஓட்டு கேட்டோம், தமிழக மக்கள் ஓட்டுப் போடவில்லை. ஒரு எம்எல்ஏ கூட கொடுக்க வில்லை. இந்த தேர்தலில் எங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டோம்’’ என்று பட்டவர்த்தனமான போட்டு உடைத்தார் அன்புமணி. 

இதன் பின்னணியில் மறைந்து இருக்கும் கேள்வி, நாங்கள் கொள்கையை சொல்லி ஓட்டு கேட்ட போது நீங்கள் ஆதரித்தீர்களா? என்பது தான். தமிழக ஊடகங்களின் பின்னணியில் இந்த கேள்விக்கு மவுனம் தான் பதில். ஏனென்றால் அவர்கள் வந்த விதம் அப்படி.

சுந்திரப் போராட்டத்தின் போது, இந்தியர்களிடையே, நாடு, நாட்டு மக்கள், சுதந்திரம் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்பதற்காக, இந்தியன் எஸ்பிரஸ், இந்து போன்ற நாளிதழ்கள் தோன்றின. நாஞ்சில் நாடு என்று அழைக்கப்படும், கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைய வேண்டும் என்று உருவானது தினமலர்.

 தமிழர்களுக்கு, குறிப்பாக அடித்தட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்று உருவானது தினதந்தி. இதனால், அவை இன்றளவும் மக்கள் கடமையாற்றி வருகின்றன.

ஆனால் சமீபத்தில் ஊடங்களின் தோற்றம் ஏன் என்பது அதன் உரிமையாளர்கள் வந்த வழியை பார்த்தலே தெரியும். 
உண்மையில் ஊடகங்கள், கடந்த 60 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி நாட்டில் ஏற்படுத்திய முன்னேற்றங்கள், பாஜக அரசு கடந்த ஆட்சிகளில் செய்ய வளர்ச்சி திட்டங்கள், இருகட்சிகளின் மக்கள் விரோத செயல்கள் ஆகியவற்றை வெளிப்படுத்த வேண்டும். 

ஆனால் அவ்வாறு செய்யாமல் ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு சேனல், அதற்கு ஒரு மறைமுக செயல்திட்டம் என்று செயல்படுகிறது. இன்றைக்கு அன்புமணியை இவ்வளவு கேள்வி கேட்பவர்கள் ஸ்டாலினை, வைகோவை, இடதுசாரிகளை இவ்வளவு கேட்பார்களா என்ற எண்ணம் தான் அன்புமணியின் பேட்டியை பார்த்தால் ஏற்படுகிறது.  

ஸ்டாலின், கூட்டணியை பற்றி பேசும் போது, பணத்திற்கு விலை போய்விட்டார்கள் என்று விமர்சனம் செய்கிறார். அப்படி என்றால், நீங்கள் காங்கிரஸ் கட்சிக்கு எவ்வளவு கொடுத்தீர்கள், எவ்வளவு வாங்கினீர்கள் என்று கேட்போமா. அப்படி கேட்கும் பத்திரிக்கையாளர் தொடர்ந்து அந்த நிறுவனத்தில் பணியாற்ற முடியுமா என்பது பத்திரிகை உலகின் உள்ளே இருப்பவர்ளுக்கு நன்கு தெரியும். 

இதே நிலைதான், அதிமுகவிலும். மறைந்த முதல்வர்  ஜெயலலிதா, பத்திரிக்கையாளர்களை விரல் விடும் எண்ணிக்கையில்தான் சந்தித்தார். மறைந்த தி.மு.க., தலைவர் கருணாநிதியோ, உண்மையுயான பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் தன் கருத்து முழுமையும் வெளிவராது என்று கருதி, கேள்வியும் நானே, பதிலும் நானே என்று கருத்துக்களை வெளிப்படுத்துவார்.  

பத்திரிக்கைகள் ஜனநாயகத்தின் நான்காவது துாண். அது, பைசா நகர் கோபுரம் போல இன்று சரிந்து சாய்ந்து கொண்டிருக்கிறது. இது நிச்சயம் நிமிர வேண்டும். 

newstm.in

இந்த கட்டுரையில் இடம் பெறும் அனைத்து கருத்துக்களும் கட்டுரையாளரின் சாெந்த கருத்துக்களே
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close