பா.ம.க., மாநில துணை தலைவர் ரஞ்சித் கட்சியிலிருந்து விலகல் 

  Newstm Desk   | Last Modified : 26 Feb, 2019 06:23 pm
actor-ranjit-exit-form-pmk

வரும் லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., உடன் பா.ம.க., கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, பா.ம.க.,  மாநில துணை தலைவரும், நடிகருமான, ரஞ்சித், கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். 

மாநிலத்தை ஆளும், அ.தி.மு.க., அரசு, மீது, பாட்டாளி மக்கள் கட்சி, பல்வேறு ஊழல் புகார்களை முன் வைத்தது. இது குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி, கவர்னரிடம் மனு அளித்தது. இந்நிலையில்,  வரும் லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணியில் அந்த கட்சியும் இணைந்துள்ளது. 

அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்ததற்கான காரணம் குறித்து, பத்திரிக்கையாளர்களிடம், பா.ம.க., தலைவர் ராமதாஸின் மகனும், தருமபுரி எம்.பி.,யுமான அன்புமணி விளக்கம் அளித்தார். இது, தேர்தல் நேர வியூகம் என்றும் தெரிவித்தார். 

இந்நிலையில், பா.ம.க.,வின் கூட்டணி முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள, அந்த கட்சியின் மாநில துணை தலைவரும், திரைப்பட நடிகருமான ரஞ்சித், பா.ம.க.,விலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். 

கட்சியின் அடிப்படை கொள்கைகளுக்கு எதிராக செயல்படும் அ.தி.மு.க.,வுடன் எப்படி கூட்டணி வைக்க முடியும் என கேள்வி எழுப்பியுள்ள ரஞ்சித், கூட்டணி குறித்து, அன்புமணி அளிக்கும் விளக்கங்கள் ஏற்கும் படி இல்லை என்றும் கூறியுள்ளார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close