அ.தி.மு.க., கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிக்கு ஒரு சீட் ஒதுக்கீடு

  Newstm Desk   | Last Modified : 02 Mar, 2019 12:02 pm
puthiya-tamizhagam-party-joints-aiadmk-alliance


புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, இன்று அ.தி.மு.க., தலைமையகத்திற்கு வந்தார், அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட முக்கிய தலைவர்களுடன் பேச்சு நடத்திய பின், லோக்சபா தேர்தலுக்கான அ.தி.மு.க., கூட்டணியில் இணைவதாக அறிவித்தார். 

லோக்சபா தேர்தலுக்கான, அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணியில், ஏற்கனவே, பா.ம.க.., மற்றும் பா.ஜ., ஆகிய கட்சிகள் இணைந்துள்ளன. அதே சமயம், தே.மு.தி.க.,வுடன் தீவிர கதியில் பேச்சு நடந்து வருகிறது. மேலும் சில சிறிய கட்சிகளும் இந்த கூட்டணியில் இடம் பெறாலம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, நேற்று, அ.தி.மு.க., தலைமையகத்திற்கு வருகை தந்தார். வரும் லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணியில், புதிய தமிழகம் கட்சிக்கு ஒரு சீட் ஒதுக்குவதாக ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதற்கான ஒப்பந்தத்தில் இரு தரப்பினரும் கையொப்பம் இட்டனர். 

இதை தொடர்ந்து, தமிழகத்தில் நடைபெறவுள்ள, 21 சட்டசபை தொகுதி இடைத் தேர்தலிலும், அ.தி.மு.க.,வுக்கு, புதிய தமிழகம் கட்சி ஆதரவளிக்கும் எனவும் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். தவிர, புதிய தமிழகம் தங்கள் கட்சி சின்னத்திலேயே போட்டியிடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close