திமுக கூட்டணியில் விசிகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!

  Newstm Desk   | Last Modified : 04 Mar, 2019 11:48 am
2-seats-allocated-to-vck-in-dmk-allience

மக்களவைத் தேர்தலில், திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. 

விடுதலை சிறுத்தைகள் கட்சியுடன் தொகுதி பங்கீடு தொடர்பான இரண்டாம்கட்ட பேச்சுவார்த்தை, சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை நடைபெற்றது. இதில் திமுக சார்பில் துரைமுருகன், டி.ஆர்.பாலு, எ.வ.வேலு உள்ளிட்டோரும். விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அதன் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். இதில் விசிகவிற்கு 2 தொகுதிகளை ஒதுக்குவதென ஒப்புக்கொள்ளப்பட்டது.. 

தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, திமுக தலைவர் ஸ்டாலின், விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

விசிக தலைவர் திருமாவளவன் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடயிருப்பதாக ஏற்கெனவே அறிவித்திருந்தார். அத்தொகுதியை தவிர விழுப்புரம் அல்லது திருவள்ளூர் தொகுதி ஒதுக்கப்பட வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தொகுதி பங்கீட்டிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், "மக்களவைத் தேர்தலில் விசிக 2 தொகுதிகளில் போட்டியிடுவதாகவும், எந்தச் சின்னத்தில் போட்டியிடுவது என ஆலோசித்து இரண்டொரு நாளில் அறிவிப்படும்" என்றும் தெரிவித்தார். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close