இரட்டை இலை சின்னம் - உச்சநீதிமன்றத்தில் டி.டி.வி. மேல்முறையீடு

  Newstm Desk   | Last Modified : 05 Mar, 2019 12:12 pm
ttv-files-appeal-in-supreme-court-against-the-two-leaves-verdict

இரட்டை சிலை சின்னத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி - துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியினருக்கு ஒதுக்கி டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக அமமுக துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க. இரு அணிகளாகப் பிரிந்தது. ஓ.பி.எஸ். தரப்பும், ஈ.பி.எஸ். தரப்பும் இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோரின. இந்நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது இரட்டை இலை சின்னம் முடக்கி வைக்கப்பட்டது. அதன் பிறகு தினகரனும், சசிகலாவும் இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோரி தேர்தல் ஆணையத்தில் முறையிட்டனர். இதற்கிடையே, ஈ.பி.எஸ். - ஓ.பி.எஸ். அணிகள் ஒன்றிணைந்தன. இதையடுத்து, அவர்களுக்கு சின்னம் ஒதுக்கப்பட்டது.

அதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் டிடிவி தொடர்ந்த வழக்கில் கடந்த மாதம் 28ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ். அணியின் பக்கம்தான் பெரும்பாலான எம்.பி.க்களும், எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர் என்பதை சுட்டிக்காட்டி, அவர்களுக்கே சின்னத்தை ஒதுக்கியது நீதிமன்றம். இந்நிலையில், அந்தத் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் டிடிவி இன்று மேல்முறையீடு செய்துள்ளார்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close