தி.மு.க., கூட்டணியில் ம.தி.மு.க.,வுக்கு ஒரு தொகுதி தான்!

  Newstm Desk   | Last Modified : 05 Mar, 2019 01:59 pm
dmk-mdmk-alliance-meeting

நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாக, தி.மு.க., - ம.தி.மு.க., இடையே இன்று, 3ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதன் முடிவில், ம.தி.மு.க.,வுக்கு  ஒரு மக்களவை தொகுதி ஒதுக்கப்பட்டது. அது மட்டுமின்றி, அந்த கட்சிக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை விட்டுத்தரவும், தி.மு.க., சம்மதம் தெரிவித்துள்ளது. 

நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாக, தி.மு.க., அதன் தோழமை கட்சிகளுடன், கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்து  பேச்சுவார்த்தை நடத்தியது.  திமுக தலைமையிலான கூட்டணியில், காங்கிரஸ் கட்சிக்கு, 10 தொகுதிகளும், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகளும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மற்றும் இந்திய ஜனநாயக கட்சிக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன. 

இதையடுத்து, தொகுதி பங்கீடு குறித்து, தி.மு.க., - ம.தி.மு.க., இடையே இன்று, 3ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், ம.தி.மு.க.,வுக்கு ஒரு மக்களவைத் தொகுதி ஒதுக்கப்பட்டது. அது தவிர, அந்த கட்சிக்கு, ஒரு மாநிலங்களை உறுப்பினர் பதவியை விட்டுத்தரவும், தி.மு.க., சம்மதம் தெரிவித்துள்ளது. 

திமுக கூட்டணியில் இந்த தொகுதி பங்கீடு, தனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக வைகோ தெரிவித்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close