மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுடன் சுதீஷ் சந்திப்பு!

  Newstm Desk   | Last Modified : 06 Mar, 2019 02:44 pm
sudheesh-meets-central-minister-piyush-goal

தேமுதிகவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக மத்திய அமைச்சர் பியூஸ்கோயலுடன் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். 

அதிமுக-பாஜக- பாமக கூட்டணியில் தேமுதிகவை இணைப்பது தொடர்பாக அதிமுக மற்றும் பாஜக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. மேலும் அதிமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு 4 இடங்கள் ஒதுக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதுவரை தேமுதிக இறுதி முடிவை அறிவிக்கவில்லை. 

கூட்டணியில் இழுபறி நீடித்து வரும் நிலையில், சென்னை விமானநிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில், மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி ஆகியோர் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.  இதனிடையே தேமுதிக துணை செயலாளர் சுதீஷ், தேமுதிக நிர்வாகி பார்த்த சாரதி ஆகியோர்,  மத்திய அமைச்சர் மற்றும் அமைச்சர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close