கூட்டணிக்கு சென்ற தேமுதிக; கைவிரித்த திமுக!

  Newstm Desk   | Last Modified : 06 Mar, 2019 03:58 pm
dmdk-executives-meet-dmk

அதிமுக, தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தைகள் இறுதிகட்டத்தை எட்டிய நிலையில், தேமுதிக மூத்த நிர்வாகிகள் சிலர், திமுக-வுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், திமுகவிடம் கூட்டணியில் தேமுதிகவுக்கு இடமில்லை என துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

அதிமுக, பாரதிய ஜனதா கூட்டணியில் தேமுதிக இணையும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நீண்ட நாட்களாக கூட்டணி பேச்சுவார்த்தைகள் இழுபறியில் இருந்து வந்த நிலையில் தேமுதிக துணைச் செயலாளர் சுதீஷ், இன்று இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார். அதேநேரத்தில், தேமுதிக மூத்த நிர்வாகிகள் சிலர் திமுக முதன்மை செயலாளர் துரைமுருகனுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். 

ஆனால், கூட்டணியில் தேமுதிகவுக்கு இடமில்லை என கூறிவிட்டதாக துரைமுருகன் தெரிவித்துவிட்டார். தேமுதிகவின் சுதீஷ் தன்னிடம் தொலைபேசியில் பேசியதாகவும், "தலைவர் ஊரில் இல்லை. கூட்டணிக்கு ஒதுக்க எங்களிடம் தொகுதியும் இல்லை" என்று கூறியதாக துரைமுருகன் தெரிவித்துள்ளார்.  

அதிமுக, பாஜகவுடன் சுதீஷ் நடத்திய பேச்சுவார்த்தைகளும் தோல்வியடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கிளாம்பாக்கத்தில் பிரதமர் மோடி கலந்துகொள்ளும் தமிழக கூட்டணி கட்சிகள் பொதுகூட்டத்தில் விஜய்காந்தின் படங்கள் அகற்றப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close