பிரதமர் வேட்பாளர் யார் என எதிர்கட்சிகளால் சொல்ல முடியுமா? - ஓபிஎஸ் சவால்

  Newstm Desk   | Last Modified : 06 Mar, 2019 05:21 pm
can-opposition-name-their-pm-candidate-ops

பிரதமர் மோடி கலந்துகொண்ட அதிமுக, பாஜக, பாமக கூட்டணி கட்சிகள் மாநாட்டில் பேசிய துணை முதல்வர் ஓபிஎஸ், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களால் தங்களது பிரதமர் வேட்பாளர் யார் என கூற முடியுமா என கேள்வி எழுப்பினார்.

காஞ்சிபுரம் மாவட்டம் கிளாம்பாக்கம் பகுதியில் அதிமுக பாஜக பாமக கூட்டணி கட்சிகள் மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில், பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில் பேசிய துணை முதல்வர் ஓபிஎஸ், பிரதமர் மோடி மட்டும் தான் பிரதமருக்கான தகுதி உடையவர், என்று கூறினார். 

மேலும், திமுக தலைவர் ஸ்டாலின், தமிழகத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்து விட்டு தற்போது அமைதி காப்பது ஏன் என்றும், எதிர்கட்சிகளால் தங்களது பிரதமர் வேட்பாளர் யார் என கூறமுடியுமா என்றும் ஓபிஎஸ் கேள்வி எழுப்பினார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close