சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆரின் பெயர்: பிரதமர் மோடி

  Newstm Desk   | Last Modified : 06 Mar, 2019 05:51 pm
chennai-central-to-be-renamed-after-mgr-modi

கூட்டணி கட்சிகள் மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு முன்னாள் முதல்வர் எம்.ஜி. ஆரின் பெயர் வைக்கப்படும் என்றும், விமான நிலையங்களில் தமிழில் அறிவிப்புகள் வெளியிடப்படும் என்றும் கூறினார். 

காஞ்சிபுரம் மாவட்டம் கிளம்பாக்கத்தில் நடைபெற்ற அதிமுக, பாஜக, பாமக கூட்டணி கட்சிகள் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு முன்னாள் முதல்வர் மற்றும் அதிமுக தலைவர் எம்.ஜி.ஆரின் பெயர் வைக்கப்படும் என தெரிவித்தார்.

உலகின் மிகத் தொன்மையான மொழிகளில் தமிழும் ஒன்று என கூறிய பிரதமர் மோடி, இனி விமான நிலையங்களில், தமிழகத்தில் இருந்து செல்லும் விமானங்கள் மற்றும் தமிழகத்திற்கு வரும் விமானங்களின் அறிவிப்புகள் தமிழிலும் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், நாடு வலிமை பெற்று வருவதை எதிர்க்கட்சிகள் விரும்பவில்லை என்றும், பிரதமர் கூறினார். "தேசிய ஜனநாயக கூட்டணியில், முக்கிய அரசு முடிவுகள் டெல்லியில் எடுக்கப்படுவதில்லை. மக்கள் எடுக்கிறார்கள். ஆனால், முந்தைய ஆட்சியில் டெல்லியில், ஏ.சி அறையில் அவர்களின் குடும்ப நலத்துக்கான முடிவுகளை மட்டும் எடுத்து வந்தார்கள்" என்றும் பேசினார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close