வருகிற மே மாதம் உள்ளாட்சித் தேர்தல்: ஜெயக்குமார் ஆரூடம்!

  Newstm Desk   | Last Modified : 08 Mar, 2019 02:38 pm
minister-jayakumar-press-meet

வருகிற மே மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது என்றும் தேர்தலில் பெண்களுக்கு இடஒதுக்கீடு இருக்கும் என்றும் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடனான தேமுதிக கூட்டணி குறித்து பேச்சுவார்த்தையில் இன்னும் முடிவு எட்டப்படாமலே உள்ளது. இன்னும் ஓரிரு நாளில் கூட்டணி குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் என்று தேமுதிக நிர்வாகி சுதீஷ் நேற்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், "தேமுதிகவுடன் கூட்டணி பற்றி சுமூகமாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. நீங்கள் கூறுவதுபோல் அதில் எந்த இழுபறியும் இல்லை. தேர்தலுக்கு இன்னும் நேரம் இருக்கிறது. எனவே விரைவில் சுமூகமான முடிவு கிடைக்கும். 

பல ஊழல்களுக்கு சொந்தக்காரரான காங்கிரஸ் கட்சி, திமுக உடன் கூட்டணி வைத்துள்ளது. நாங்கள் ஊழலற்ற கூட்டணியில் இடம் பெற்று இருக்கிறோம். 

மேலும், வருகிற மே மாதம் உள்ளாட்சித்தேர்தல் நடக்க வாய்ப்பு உள்ளது. தேர்தலில் பெண்களுக்கு இடஒதுக்கீடு இருக்கும்" என்று கூறினார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close