பிரதமர் தமிழகம் வருவது தேர்தலுக்காக அல்ல: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

  Newstm Desk   | Last Modified : 09 Mar, 2019 10:03 pm
prime-minister-s-visit-not-about-election-cm-edappadi-palanisamy

பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருவது, நலத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக தான் என்றும், தேர்தலுக்காக இல்லை என்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

அதிமுக, பாஜக, பாமக கூட்டணி, வரும் நாடாளுமன்ற தேர்தலில் சேர்ந்து போட்டியிட உள்ளன. சமீபத்தில் நடைபெற்ற நலத்திட்டங்கள் விழாவை தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி கூட்டணி கட்சிகளின் மெகா பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார். இதைத் தொடர்ந்து, பிரதமர் மோடி தமிழகத்தில் நலத்திட்டங்கள் துவங்கும் நிகழ்ச்சிகளை தேர்தலுக்காக பயன்படுத்துவதாக எதிரட்சிகள் குற்றச்சாட்டுகளை எழுப்பின.

 இது குறித்து பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பிரதமர் தமிழகம் வருவது நலத்திட்டங்களை செயல்படுத்துவதற்காக தான் என்றும், அரசியல் காரணங்களுக்காக அல்ல, என்றும் தெரிவித்தார். மேலும், அதிமுக மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தும் திமுக, அதற்கான ஆதாரங்களை நிரூபிக்க முடியுமா, என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சவால் விட்டுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close