மக்கள் நீதி மய்யத்துக்கு பேட்டரி டார்ச் லைட் சின்னம்: தேர்தல் ஆணையத்திற்கு கமல் நன்றி !

  Newstm Desk   | Last Modified : 10 Mar, 2019 10:10 am
torch-light-symbol-for-makkal-neethi-maiyam

கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பேட்டரி டார்ச் லைட் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. 

நடைபெறள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் புதிய கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் சின்னங்களை வழங்கி உத்தரவிட்டுள்ளது. இதில், கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பேட்டரி டார்ச் லைட் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.  பேட்டரி டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்கிய தேர்தல் ஆணையத்திற்கு கமலஹாசன் நன்றி தெரிவித்துள்ளார். மேலும், தேர்தல் ஆணையம் மக்கள் நீதி மய்யத்திற்கு பொருத்தமான சின்னத்தை ஒதுக்கியுள்ளதாகவும், தமிழகம், இந்திய அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தும் எனவும் கமலஹாசன் தெரிவித்துள்ளார். 

வழக்கு நிலுவையில் உள்ளதால், அமமுகவிற்கு சின்னம் ஒதுக்கப்படவில்லை. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close