தே,மு.தி.க. கூட்டணி அறிவிப்பு இன்று மாலை வெளியாகிறது

  Newstm Desk   | Last Modified : 10 Mar, 2019 12:27 pm
aiadmk-dmdk-alliance-to-be-announced-today-evening

அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இணைவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை வெளியாகவுள்ளது என்று நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவித்துள்ளன.

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தமிழகத்தில் தங்களுக்கான கூட்டணியை அமைக்கும் முயற்சிகளை தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் தீவிரமாக மேற்கொண்டன. தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் இணைந்தன. அவர்களுக்கான தொகுதிப் பங்கீடும் முடிந்துவிட்டது.

அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.,பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் இணைந்தன. இந்தக் கூட்டணியில் இணைவதாக எதிர்பார்க்கப்பட்ட தே.மு.தி.க. மற்றொரு பக்கம் தி.மு.க.வுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், குழப்பம் நீடித்து வந்த நிலையில், தே.மு.தி.க. பொருளாளர் பிரமேலதா விஜயகாந்த், அண்மையில் செய்தியாளர்களை சந்தித்து அ.தி.மு.க.வோடு தான் கூட்டணி என்பதை உறுதி செய்தார். அதே சமயம், பா.ம.க.வுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளைக் காட்டிலும் குறைவான தொகுதிகளை தே.மு.தி.க. ஏற்க மறுப்பதாக பேசப்பட்டது. இந்நிலையில், 4 தொகுதிகளைப் பெற்றுக் கொள்ள தே.மு.தி.க. சம்மதம் தெரிவித்துவிட்டதாக, கூட்டணிப் பேச்சுவார்த்தையில் இடம்பெற்றிருந்த முக்கியத் தலைவர் ஒருவர் தெரிவித்தார். இதையடுத்து இன்று மாலை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது என்றார் அவர்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close