தேர்தல்களில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும்: ஜெயக்குமார்

  Newstm Desk   | Last Modified : 10 Mar, 2019 07:08 pm
aiadmk-alliance-will-win-in-elections-jayakumar

மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

தேர்தல் தேதி அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், " 2 தேர்தல்களிலும் அதிமுக அமோக வெற்றி பெறும். மக்கள் தங்களுக்கு ஆதரவு அளிக்கின்றனர். திமுகவின் கூட்டணி குறித்து கவலை கொள்வதாக இல்லை. வெங்காயம் போன்று உரிக்க, உரிக்க ஒன்றுமில்லாதது தான் திமுக கூட்டணி.

2011 ஆம் ஆண்டு முதல் அதிமுக மகத்தான வெற்றி பெற்றுவருகிறது. அதேபோன்று, இந்த தேர்தலிலும் அதிமுக அரசின் செயல்பாடுகளை உணர்ந்து மகத்தான வெற்றிக் கனியை அளிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. தமிழ்நாட்டிற்கு நன்மை தர வேண்டும் என்பதற்காகவே மெகா கூட்டணி அமைத்துள்ளோம்.

தேமுதிகவுடனான கூட்டணி குறித்து நல்ல முடிவு வரும். கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் போது புறம்தள்ள முடியாது. அரவணைத்து போவதே சிறந்தது. அதனடிப்படையில் தேமுதிகவுடனான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது" இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close