மூன்று தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்க கோரி தி.மு.க. மனு -விசாரணைக்கு ஏற்பு

  Newstm Desk   | Last Modified : 12 Mar, 2019 11:39 am
dmk-files-plea-in-supreme-court-to-notify-by-elections-in-3-consititencies

அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் தி.மு.க. மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த மாதம் 18ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதையொட்டி, தமிழகத்தில் காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அன்றைய தினம் நடைபெறும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு வெளியிட்டார். அதே சமயம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகள் தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதால், அதற்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், அங்கும் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியிடக் கோரி திமுக வழக்கு தொடுத்துள்ளது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close