மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போட்டியிடும் தொகுதிகள் இவைதான்!

  Newstm Desk   | Last Modified : 12 Mar, 2019 02:18 pm
mp-election-cpm-contest-in-madurai-kovai

திமுக தலைமையிலான கூட்டணியில் மதுரை, கோவை மக்களவைத் தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் என்று அக்கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் தெரிவித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், திண்டுக்கல் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் மேலும் பேசியது:
நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் மத்தியில் யார் ஆட்சி அமைக்க போகிறார்கள் என்பதற்கான தேர்தல் அல்ல. நாட்டின் மதசார்பின்மை, ஜனநாயகம், அரசமைப்புச் சட்டம் ஆகியவற்றை பாதுகாப்பதற்கான தேர்தலாகும். கடந்த 5 ஆண்டுகளாக மத்திய பாஜக ஆட்சி, ஆர்எஸ்எஸ் அமைப்பு மூலம் கட்டுப்படுத்தப்பட்டு வந்துள்ளது.

திமுக தலைமையிலான கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிள் ஒதுக்கப்பட்டுள்ளன. மதுரை, கோவை மக்களவைத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் என்று பிரகாஷ் காரத் தெரிவித்துள்ளார்.

கூட்டணி கட்சிகள் போட்டியிட உள்ள தொகுதிகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை அறிவிக்கவுள்ள நிலையில், மார்க்சிஸ்ட் போட்டியிடும் தொகுதிகள் குறித்து, பிரகாஷ் காரத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close