அதிமுக: இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனு விநியோகம்!

  Newstm Desk   | Last Modified : 13 Mar, 2019 10:50 am
aiadmk-optional-petition-distribution

அதிமுக சார்பில் 17 தொகுதிகளில் போட்டியிடுவதற்கான விருப்பமனு விநியோகிக்கப்பட்டு வருகிறது. 

தமிழகத்தில் காலியாக உள்ள 21 தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 18 -ஆம் தேதி மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், அதிமுக சார்பில் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனு இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் விநியோகிக்கப்பட்டு வருகிறது. ரூ.25,000 செலுத்தி விருப்ப மனுவை பெற்றுக்கொள்ளலாம் எனவும், திருவாரூர் தொகுதிக்கு ஏற்கவே விருப்பமனு பெறப்பட்டதால் 17 தொகுதிக்கு விருப்ப மனு வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், விருப்ப மனுவை பூர்த்தி செய்து இன்று மாலைக்குள் அதிமுக தலைமை அலுவலகத்தில் கொடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close