3 தொகுதிகள்... 300 வேட்பாளர்கள்....இது எப்படி இருக்கும்?!

  Newstm Desk   | Last Modified : 13 Mar, 2019 03:05 pm
3-constituencies-300-candidates

மக்களவைத் தேர்தலில் தஞ்சை,  நாகை, மயிலாடுதுறை தொகுதிகளில் தலா 100  வேட்பாளர்களை களமிறங்க உள்ளதாக தமிழக நிலம் - நீர் பாதுகாப்பு இயக்கம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக, இந்த அமைப்பின் நிர்வாகிகள் மேலும் கூறியதாவது:
விளைநிலங்கள் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட வேண்டும், சாலை விரிவாக்கப் பணிகளுக்கு நிலங்களை கையகப்படுத்தும்போது, ஒரு சதுர அடிக்கு 1,000 ரூபாய் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உல்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, எங்கள் அமைப்பு போராடி வருகிறது.

இக்கோரிக்கைகள் குறித்து, பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், வரும் மக்களவைத் தேர்தலில் தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை தொகுதிகளில் தலா 100 வேட்பாளர்கள்  என மொத்தம் 300 வேட்பாளர்களை போட்டியிட வைக்க உள்ளோம் என அவர்கள் தெரிவித்தனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close