தொகுதி பங்கீடு குறித்து விரைவில் அறிவிக்கப்படும்: அமைச்சர் ஜெயக்குமார் 

  Newstm Desk   | Last Modified : 13 Mar, 2019 08:46 pm
minister-jayakumar-interview

நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு பற்றி விரைவில் அ.தி.மு.க தலைமை அறிவிக்கும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீட்டில் எந்த இழுபறியும் இல்லை எனவும், தொகுதி பங்கீடு பற்றி விரைவில் அ.தி.மு.க தலைமை அறிவிக்கும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

மேலும், காங்கிரஸ் - தி.மு.க கூட்டணி ஆட்சியியின் போது தான் ஒன்றரை லட்சம் இலங்கை தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர்,  தமிழகத்திற்கு ராகுல் காந்தி பிரதமராக வருவது சாபக் கேடு என கூறினார்.  

தஷ்வந்திற்கு தூக்கு தண்டனை அளித்தது போல, பொள்ளாச்சி விவகாரத்தில் குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை பெற்று தர வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுத்து வருவதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.  

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close