தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிடுகிறது தா.ம.க!

  Newstm Desk   | Last Modified : 14 Mar, 2019 05:22 pm
gk-vasan-s-party-contest-in-tanjavur

அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தஞ்சாவூர் மாநிலத்தில் போட்டியிடுகிறது என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். மேலும், அதிமுக கூட்டணி மக்கள் நலனுக்காவும், தேச நலனுக்காகவும் அமைக்கப்பட்டுள்ள கூட்டணி என்றும் கூறினார். 

இன்று சென்னை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் வைத்து செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.வாசன், "அதிமுக கூட்டணியில் தமாக-வுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதனபடி, தமாக வருகிற தேர்தலில் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிடவுள்ளது.

தேர்தல் கூட்டணி என்பது வேறு; இயக்கத்தின் லட்சியம் என்பது வேறு; எனவே, தேர்தலுக்காக தான் இந்த கூட்டணி. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் தனித் தன்மையுடன் செயல்பட்டு வருகிறது. காங்கிரசிலிருந்து நாங்கள் வெளியேறி வெகுதூரம் வந்துவிட்டோம் என்று ஒவ்வொரு முறையும் கூறி வருகிறோம். 

மக்கள் நலனுக்காகவும், தேச நலனுக்காகவுமே இந்த கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. எண்ணிக்கை என்பதை விட எண்ணத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கூட்டணி தான் அதிமுக கூட்டணி. இதனை மக்களும் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் சாமானிய மக்களோடு கலந்து அவர்களின் பிரச்னைகளை பற்றி தெரிந்து கொண்டு அவர்களுக்கு ஏற்ப திட்டங்களை கொண்டு வருகிறார்கள். திமுக -காங்கிரஸ் கூட்டணி சகித்துக்கொள்ள முடியாத நிலையில் உள்ளது. அதிமுக கூட்டணியினைப் பார்த்து அவர்களுக்கு பொறுக்கவில்லை. எங்கள் கட்சியின் தொண்டர்கள் மற்றும் தலைவர்களின் கருத்தின்படியே நாங்கள் அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளோம்" என்றார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close