அகில இந்திய அளவில் அசத்தி காட்டிய அ.தி.மு.க.,

  Newstm Desk   | Last Modified : 15 Mar, 2019 11:04 am
political-article-about-admk-s-election-victory

கடந்த, 2014 லோக்சபா தேர்தலில், தமிழகத்தின், 37 தொகுதிகளில் வெற்றி பெற்ற அ.தி.மு.க., அகில இந்திய அளவில் அதிக லோக்சபா எம்.பி.,க்களை உடைய, மூன்றாவது பெரிய கட்சி என்ற அந்தஸ்த்தை பெற்றது. இதன் மூலம், லோக்சபா துணை சபாநாயகர் பதவி, அந்த கட்சியை சேர்ந்த தம்பித்துரைக்கு வழங்கப்பட்டது. 

தமிழகம், புதுச்சேரியை சேர்த்து, 40 தொகுதிகளில் தனித்து போட்டியிட்ட, அ.தி.மு.க., ஒரு கோடியே, 81 லட்சத்து, 11 ஆயிரத்து 579 ஓட்டுகள் பெற்று, 37 இடங்களில் வெற்றி பெற்றது. இது, மாெத்தம் பதவினா ஓட்டுகளில், 44.3 சதவீதம் ஆகும். 

இதன் மூலம், லோக்சபா எம்.பி.,க்கள் எண்ணிக்கையில், தேசிய அளவில், மூன்றாவது பெரிய கட்சி என்ற அந்தஸ்த்தை பெற்றது. தி.மு.க., தலைமையில் ஒரு அணியும், காங்கிரஸ் தனித்தும், பா.ஜ., தலைமையில் மற்றொரு அணியும் போட்டியிட்டன. 

இந்த தேர்தலில்,  கன்னியாகுமரியில் பா.ஜ., வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனும், தருமபுரியில், பா.ம.க., வேட்பாளர் அன்புமணியும் வெற்றி பெற்றனர். மற்ற 37 இடங்களிலும், அ.தி.மு.க., வேட்பாளர்களே வெற்றி பெற்றனர். இதையடுத்து, லோக்சபா துணை சபாநாயகர் பதவி, அ.தி.மு.க.,வை சேர்ந்த தம்பித்துரைக்கு கிடைத்தது. 

நாடு முழுவதும் வீசிய மோடி அலை, மாநிலத்தில், அளுங்கட்சி மீதான எதிர்ப்பலை, தி.மு.க.,வின் வாக்கு வங்கி, காங்கிரஸ் ஆதரவு ஓட்டுகள், பல சிறிய கட்சிகள் இணைந்து அமைத்த மக்கள் நலக் கூட்டணி என, பலவற்றையும் கடந்து, தனித்து போட்டியிட்ட அ.தி.மு.க., மிக பிரமாண்டமான வெற்றியை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது. 
newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close