வேட்பாளர்களை அறிவித்தது இந்திய கம்யூனிஸ்ட்!

  Newstm Desk   | Last Modified : 15 Mar, 2019 08:55 pm
mp-election-cpi-candidates-announced

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் தங்கள் கட்சி வேட்பாளர்களின் பெயரை இந்திய கம்யூனிஸ்ட் அறிவித்துள்ளது.

எதிர்வரும் மக்களவைத்  தேர்தலில், திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அக்கட்சி நாகை மற்றும் திருப்பூர் தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து, அக்கட்சியின் சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர்களின் பெயரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு திருவாரூரில் அறிவித்தார். அதன்படி, திருப்பூர் மக்களவைத் தொகுதியில் சுப்பராயனும், நாகை தொகுதியில் எம்.செல்வராசும் போட்டியிட உள்ளனர்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close