திமுகவுக்கு ஆதரவு: வேல்முருகன் அறிவிப்பு

  Newstm Desk   | Last Modified : 16 Mar, 2019 10:10 pm
we-will-support-dmk-velmurugan

தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், வரும் நாடாளுமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்ற கழக கூட்டணிக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக கூட்டணிக்கு எதிராக திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் சேர்ந்து போட்டியிடுகின்றன. தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் என்று திமுக தலைவர் முக ஸ்டாலினை சந்தித்தார். முன்னதாக 40 தொகுதிகளிலும் தமிழக வாழ்வுரிமை கட்சி தனித்துப் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. பின்னர் டிடிவி தினகரனுடன் சேர்ந்து நாடாளுமன்ற தேர்தலில், தமிழக வாழ்வுரிமை கட்சி போட்டியிடவுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. 

இந்த நிலையில், தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக தலைவர் முக ஸ்டாலின் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆதரவளிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close