ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் கனிமொழி வெற்றி பெறுவார்: வைகோ உறுதி!

  Newstm Desk   | Last Modified : 18 Mar, 2019 12:41 pm
vaiko-kanimozhi-meet

வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் கனிமொழி வெற்றி பெறுவார் என வைகோ தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்றத் தேர்தலில் தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் கனிமொழி.எம்.பி., போட்டியிடுகிறார். இதன்மூலமாக இவர் முதல்முறையாக அவர் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகிறார். 

இந்நிலையில் இன்று கனிமொழி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை சென்னை அண்ணாநகரில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, "நாடாளுமன்றத்தில், தமிழக நலனுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்துக்கொண்டிருப்பவர் கனிமொழி. வருகிற தேர்தலில் அவர் தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். அவருக்காக, வரும் 22ம் தேதி அன்று தூத்துக்குடியில் இருந்துதான் எனது பிரசாரத்தைத் தொடங்க இருக்கிறேன். தமிழகம் முழுவதும் உள்ள அனைத்துத் தொகுதிகளுக்கும் பிரச்சாரம் மேற்கொள்ள விரும்புகிறேன். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் அதைத்தான் விரும்புகிறார். எனவே தமிழகம் முழுவதும் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளேன்.

இந்த தேர்தலில் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் எங்களது அணி மகத்தான வெற்றி பெறும். தூத்துக்குடி தொகுதியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் கனிமொழி வெற்றி பெறுவார். ஜனநாயகமா...பாசிசமா..? என்பதற்கான பதிலை இந்தத் தேர்தல் தரும்" என்று பேசினார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close