த.மா.கா., வேட்பாளர் அறிவிப்பு; சைக்கிள் சின்னம் ஒதுக்கீடு

  Newstm Desk   | Last Modified : 18 Mar, 2019 02:40 pm
tamil-manila-congress-announced-their-canditate-for-loksabha-election

லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில், தஞ்சாவூர் தொகுதியில்,என்.ஆர்.நடராஜன் போட்டியிடுவார் என, அந்த கட்சித் தலைமை அறிவித்துள்ளது.

அடுத்த மாதம் நடைபெறவுள்ள லோக்சபா தேர்தலுக்காக அமைக்கப்பட்டுள்ள கூட்டணியில், ஜி.கே.வாசன் தலைமையிலான, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, அ.தி.மு.க., அணியில் இணைந்துள்ளது. அந்த கூட்டணியில், த.மா.கா.,வுக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக, தஞ்சாவூர் தொகுதியில், த.மா.கா., வேட்பாளர் போட்டியிடுவார் என, வாசன் அறிவித்திருந்தார். இந்நிலையில், அந்த கட்சியின் சார்பில், என்.ஆர்.நடராஜன் களம் இறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளருக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close