குமரவேல் விலகல் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி விளக்கம்!

  Newstm Desk   | Last Modified : 18 Mar, 2019 03:41 pm
makkal-needhi-maiyam-explained-about-kumaravel-resignation

மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு உறுப்பினர் குமரவேல் கட்சியிலிருந்து விலகுவதாக இன்று கமல்ஹாசனிடம் கடிதம் வழங்கினார். தற்போது இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி விளக்கம் அளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 

கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், "நேர்காணலுக்குக் கூட வராமல், தான் தேர்தலில் போட்டியிடுவதாக சி.கே.குமரவேல் அறிவித்தது கட்சியின் கட்டுப்பாடுகளுக்கு முரணான செயல். அவரை அழைத்து இதுதொடர்பாக கேட்கும் போது அவரது விளக்கம் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை. ஜனநாயக முறைப்படி நடைபெற்ற வேட்பாளர் தேர்வுமுறைக்கு எதிராக செயல்பட்டதால் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைமை, குமரவேலின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்கிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close