அதிமுக கூட்டணியை மக்கள் வெற்றி அடையச் செய்வார்கள்: தம்பிதுரை!

  Newstm Desk   | Last Modified : 18 Mar, 2019 04:48 pm
thambi-durai-press-meet

அதிமுக தலைமையிலான கூட்டணியை தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் மக்கள் வெற்றி பெறச் செய்வார்கள் என்று மக்களவை துணை சபாநாயகரும், அதிமுக எம்.பியுமான தம்பிதுரை தெரிவித்துள்ளார். 

திருச்சி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "நாட்டின் நலன், தமிழ் நாட்டின் நலன், தமிழ் நாட்டின் உரிமை ஆகியவற்றை மையப்படுத்தி அ.தி.மு.க தேர்தல் அறிக்கை இருக்கும். பல கட்சிகளுடன் கூட்டணி வைத்தாலும் எங்கள் கொள்கையிலிருந்து நாங்கள் எப்பொழுதும் விடுபடமாட்டோம். 

கரூர் மக்களின் எதிர்பார்ப்பை நான் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறேன். மீண்டும் கரூர் தொகுதியில் போட்டியிடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க போராடினோம். அதில் வெற்றி பெற்றோம்.

அதேபோன்று நாடாளுமமன்றத் தேர்தலில் உருவான எங்கள் கூட்டணி மக்கள் விரும்பும் கூட்டணி. இந்த கூட்டணியை 40 தொகுதிகளிலும் மக்கள் வெற்றி பெற செய்வார்கள்" என்று தம்பித்துரை இன்று தெரிவித்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close