ப்ளீஸ்... எங்களை புரிஞ்சுகோங்க... பிரியங்கா வேதனை!

  Newstm Desk   | Last Modified : 18 Mar, 2019 04:54 pm
priyanka-clarifies-that-congress-also-wish-to-defeat-bjp

‛மத்தியில் ஆளும் பா.ஜ., தலைமையிலான ஆட்சியை அகற்றவே நாங்களும் பாடுபடுகிறோம். இதை, பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும்’ என, காங்., பொது செயலர் பிரியங்கா வாத்ரா பதில அளித்துள்ளார்.

உத்தர பிரதேசத்தில், காங்கிரஸ் கட்சியை சேர்க்காமல், மெகா கூட்டணி அமைத்துள்ள பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கட்சித் தலைவர்கள், காங்கிரசின் செயல்பாட்டை கடுமையாக விமர்சித்துள்ளனர். அந்த கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா மற்றும் தற்போதைய தலைவர் ராகுல் போட்டியிடும் தொகுதிகள் தவிர்த்து, மற்ற அனைத்து தொகுதிகளிலும், அகிலேஷ் - மாயாவதி கூட்டணி பாேட்டியிடுவதாக அறிவித்துள்ளது. 

எனினும், எப்படியும் அந்த கூட்டணியில் இடம் பிடிக்க வேண்டும் என்ற வகையில் காங்கிரசார் பேசி வருகின்றனர். இதற்கிடையே, வெறும் இரண்டு சீட்டுகளை ஒதுக்கும் அளவுக்கு, காங்கிரஸ் குறைந்து போகவில்லை என கருத்து தெரிவித்த காங்கிரசார், பா.ஜ.,வை வீழ்த்த தங்கள் பலமும் தேவைப்படும் என கூறியுள்ளனர். 

தவிர, அகிலேஷ், மாயாவதி மற்றும் அவர்களின் உறவினர்கள் போட்டியிடும், ஏழு தொகுதிகளில், தங்கள் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடமாட்டார்கள் என, உத்தர பிரதேச மாநில கிழக்கு பகுதி பொதுசெயலர் பிரியங்கா வாத்ரா கூறியிருந்தார். 

அவரின் கருத்துக்கு, மாயாவதி, அகிலேஷ் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இது குறித்து பிரியங்கா கூறுகையில், ‛‛பா.ஜ.,வுக்கு எதிராகத் தான் நாங்களும் போராடி வருகிறோம். அவர்களை மீண்டும் மத்தியில் ஆட்சி அமைக்க விடக்கூடாது என்பதே எங்கள் லட்சியம். உ.பி.,யில் உள்ள 80 தொகுதிகள், மத்திய ஆட்சியை முடிவு செய்யும் பலம் படைத்தது. எனேவ, அகிலேஷ், மாயாவதியின் கூட்டணி மட்டுமே, பா.ஜ.,வை வீழ்த்த போதும் என நினைக்க கூடாது’’ என்றார். 

பிரியங்காவின் கருத்துக்கு, அகிலேஷ், மாயாவதி மீண்டும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தங்கள் பலம் தெரியாமல், தங்கள் கூட்டணியை குறைத்து மதிப்பிட வேண்டாம் எனவும் அவர்கள் கூறியுள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close