திமுக கூட்டணிக்கு ராஜகண்ணப்பன் ஆதரவு

  Newstm Desk   | Last Modified : 18 Mar, 2019 06:26 pm
rajakannappan-supports-dmk

அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன், அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க ஸ்டாலினை சந்தித்த பின்னர், தான் திமுக கூட்டணிக்கு ஆதரவளிப்பதாக செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். 

முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன், கூட்டணியினால் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அதிமுகவில் இருந்து விலகுவதாக தெரிவித்த நிலையில், திமுக தலைவர் முக.ஸ்டாலினை இன்று மாலை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவளித்து பிரச்சாரம் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார். 

பாரதிய ஜனதா கட்சிக்கு முக்கிய தொகுதிகளை ஒதுக்கிய காரணத்தால் அதிமுகவில் இருந்து விலகியதாவும், திமுக கூட்டணியில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்காகவும் பிரச்சாரம் செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட ராஜகண்ணப்பன் தயாராக இருந்ததாக கூறப்பட்ட நிலையில், இரண்டு தொகுதிகளையும் கூட்டணி கட்சியான பாரதிய ஜனதாவிடம் அதிமுக வழங்கியது. இதைத் தொடர்ந்து அதிமுகவில் இருந்து விலகி, திமுகவுக்கு ஆதரவளிக்க அவர் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close