அ.தி.மு.க.,வை அடகு வைத்து விட்டனர்: ராஜகண்ணப்பன் காட்டம்

  Newstm Desk   | Last Modified : 18 Mar, 2019 06:26 pm
rajakannappan-meets-stalin-he-supports-dmk

சென்னை அறிவாலத்தில், தி.மு.க., தலைவர் ஸ்டாலினை, அ.தி.மு.க.,வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் நேரில் சந்தித்து பேசினார். 

வரும் லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க.,சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததை அடுத்து, அவர், தி.மு.க., தலைவர் ஸ்டாலினை சந்தித்து, வரும் தேர்தலில் தி.மு.க.,வுக்கு தன் ஆதரவை தெரிவித்தார். 

ஸ்டாலினை சந்தித்த பின், ராஜகண்ணப்பன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
இன்றைய அ.தி.மு.க., மத்தியில் ஆளும், பா.ஜ.,வுக்கு கொத்தடிமையாக செயல்படுகிறது. அ.தி.மு.க.,வில் உட்கட்சி பூசல் உள்ளது. தங்கமணி, வீரமணி போன்வர்களின் ஆதிக்கத்தில், முதல்வர் எடப்பாடி கட்சியை நடத்தி வருகிறார். 

ஓ.பி.எஸ்., - இ.பி.எஸ்., ஆகிய இருவருக்கும் கட்சியை நடத்தும் ஆளுமை இல்லை. ஓ.பன்னீர் செல்வத்தின் மகனுக்கு சீட் வழங்குவதற்காக, தென் மாவட்டங்கள் அடகு வைத்துவிட்டனர். அ.தி.மு.க.,வில் தலைவர்கள் முன்னிலையிலேயே, சண்டை நடக்கிறது. 

தங்கள் சுய நலத்திற்காக, அ.தி.மு.க.,வை நடத்தி வரும், இருவர், கட்சியை அடகு வைத்துவிட்டதாகவும், வரும் தேர்தலில், தி.மு.க.,வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close