தேமுதிக 4 தொகுதிகளிலும் வெற்றி பெறும்: தமிழிசை சௌந்தரராஜன் 

  Newstm Desk   | Last Modified : 19 Mar, 2019 08:11 am
sudheesh-meets-thamizhisai

சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் தேமுதிக துணை செயலாளரும், கள்ளக்குறிச்சி தொகுதி நாடாளுமன்ற வேட்பாளருமான எல்.கே.சுதிஷ், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனை சந்தித்தார்.  அவருடன் தேமுதிக வேட்பாளர்கள் அழகாபுரம் மோகன்ராஜ், அழகர்சாமி, இளங்கோ உள்ளிட்டோர் சந்தித்தனர். 

இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எல் கே சுதீஷ், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை மரியாதை நிமித்தமாக சந்திக்க வந்துள்ளேன் எனவும், ஏற்கனவே முதல்வர், துணை முதல்வர் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜிகே வாசன் உள்ளிட்டோரை சந்தித்து உள்ளேன் எனவும் தெரிவித்தார்.  மேலும், தங்கள் கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும் எனவும், விஜயகாந்த் பிரச்சாரம் மேற்கொள்வது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் எனவும் கூறினார். 

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சவுந்தரராஜன், எல்.கே.சுதிஷ் மரியாதை நிமித்தமாகவும், வாழ்த்துக்களை பெறுவதற்காகவும் தன்னை சந்தித்தார் எனவும், நிச்சயமாக நான்கு தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பு கிடைக்கும், மீண்டும் மோடி பிரதமராவார் என கூறினார்.  மேலும், இந்த கூட்டணி, வலுவான கூட்டணி எனவும், கூட்டணிக்குள் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை எனவும் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close