வாரிசுப் போரில் சிக்கிய கள்ளக்குறிச்சி

  பாரதி பித்தன்   | Last Modified : 19 Mar, 2019 03:05 pm
political-article-about-kallakurichi-loksabha-constituency

தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., கட்சிகளில், கனிசமான எண்ணிக்கையில் வாரிசுகள் களம் இறங்கி உள்ளனர். அதில் கள்ளக்குறிச்சி தேர்தல் களம் இன்னும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இதில், எதிர் எதிரில் 2 வாரிசுகள் போட்டியிடுகிறார்கள். 
தி.மு.க.,வில் முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதம்சிகாமணி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து தே.மு.தி.க.,வில் விஜயகாந்த் குடும்பவாரிசான சுதீஷ் போட்டியிடுகிறார். 

2011ம் ஆண்டில், தமிழகம் முழுவதும் தி.மு.க., மற்றறும் அ.தி.மு.க., அலை வீசிக் கொண்டிருந்த போது, தே.மு.தி.க., தனித்து நின்று விஜயகாந்த் வெற்றி பெற்ற ரிஷியவந்தியம் சட்டசபைத் தொகுதி, இதில் இடம் பெற்றுள்ளது. 

இது, தே.மு.தி.க., சுதீஷுக்கு ஆதரவான நிலையை ஏற்படுத்தலாம். இந்த தொகுதியில், 2 முறை மட்டும் தி.மு.க., வெற்றி பெற்றது.  கள்ளக்குறிச்சியில், அ.தி.மு.க., பிரபு, உளுந்துார் பேட்டையில் தொடர்ந்து, 2 முறை அ.தி.மு.க., குமரகுரு, சங்கராபுரம் தொகுதியில், தி.மு.க., உதயசூரியன் வெற்றி பெற்றுள்ளார். 

கங்கவல்லி, ஆத்துார், ஏற்காடு ஆகிய இடங்களில், தற்போது, அ.தி.மு.க., வெற்றி பெற்றுள்ளது. கடந்த ஜனவரி மாதம் தான், கள்ளக்குறிச்சி மாவட்டமாக உருவாகி உள்ளது. இத்தனையும், தனக்கு சாதகமாக இருக்கும் என்று சுதீஷ் களம் இறங்கி உள்ளார். 

அதே நேரத்தில், திமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர்களில் முக்கியமானவர் பொன்முடி. அவரின் தயவு இருந்தால் எதிர்காலத்திற்கு நல்லது என்று நினைக்கும் தி.மு.க.,வினர், கவுதம்சிகாமணியின் வெற்றிக்கு கடுமையாக பாடுபடுவார்கள். 

மேலும், பெரும்பாலும் தி.மு.க., இந்த தொகுதிகளில், 2 இடத்தை பல முறை பிடித்துள்ளது. தற்போது இங்குள்ள சட்டசபைத் தொகுதிகளில், பெரும்பாலும் அ.தி.மு.க.,வே வெற்றி பெற்றுள்ளதால், அதைத்  தாண்டி வெற்றி பெற, தி.மு.க., கடுமையாக போராட வேண்டி வரும். 
இந்த இரண்டு வாரிசுகளில் யார் கரை சேருவார் என்பதை தேர்தல் முடிவுதான் காட்டும்.  

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close