இன்று மதியத்திற்குள் அந்த சஸ்பென்ஸ் முடிவுக்கு வந்திடும் : தமிழிசை 

  Newstm Desk   | Last Modified : 20 Mar, 2019 07:32 am
bjp-candidates-list-wiill-be-released-today-tamilisai

மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் பட்டியல் இன்று மதியத்திற்குள் வெளியிடப்படும் என்று மாநில பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

வரும் மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜக போட்டியிடுகிறது. இக்ககூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுவிட்ட நிலையில், பாஜக வேட்பாளர்கள் பட்டியல் மட்டும் இன்னும் வெளியிடப்படாமல் உள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியது:
தமிழகத்தில் பாஜக சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் உத்தேச பட்டியல், டெல்லியில் உள்ள கட்சியின் மத்திய தேர்தல் குழுவிடம் நேற்று நேரில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அக்குழு வேட்பாளர்களை இறுதி செய்து, இன்று மதியத்துக்குள் பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுவிடும்.

திமுகவிலேயே இடஒதுக்கீடு இல்லாதபோது, தனியார் துறையில் எப்படி இடஒதுக்கீட்டை அமல்படுத்த முடியும் எனத் தெரியவில்லை. மொத்தத்தில், திமுகவின் தேர்தல் அறிக்கை வானத்தில் கோட்டை கட்டுவது போல உள்ளது என தமிழிசை தெரிவித்தார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close