செல்ஃபியுடன் தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய ஸ்டாலின்!

  Newstm Desk   | Last Modified : 20 Mar, 2019 09:06 am
dmk-chief-stalin-begins-election-campaign-at-thiruvarur

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமது தேர்தல் பிரசாரத்தை திருவாரூரில் இன்று காலை தொடங்கினார்.

மக்களவைத் தேர்தல் மற்றும் தமிழக சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான பிரசாரத்தை,  திருவாரூரில் மார்ச் 20 -ஆம் தேதி தொடங்கவுள்ளதாக ஸ்டாலின் ஏற்கெனவே அறிவித்திருந்தார்.

அதன்படி இன்று கலை 7.30 மணியளிவில், திருவாரூர் சன்னதி தெருவில் உள்ள தமது பூர்விக இல்லத்திலிருந்து அவர் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.

தமது வீட்டு வாசலில் கூடியிருந்த கட்சித் தொண்டர்களின் வாழ்த்துகளை பெற்ற ஸ்டாலின், அங்கு சிறுமி ஒருவரின் மொபைல்ஃபோனில் செல்ஃபி எடுத்துக் கொண்ட பிறகு, தமது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.

திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் பூண்டி கலைவாணை ஆதரித்து, அப்பகுதியில் அவர் வாக்குகளை சேகரித்தார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close